பெரம்பலூர், ஜூன் 16: பெரம்பலூர் மாவட்டத் தில் 322 அரசு பள்ளிகள் உள்பட 417 பள்ளிகளுக் கான பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டன. இதை முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் நேரில் ஆய்வு செய்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட் டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடந்த 2020ம் ஆண்டு 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, அது பல்வேறு கட்ட தளர்வுகளுடன் இன்று வரை தொடர்ந்து வருகி றது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக்கட் டுப்படுத்த கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் இன்னமும் முழுமையாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் 12ம் வகுப்பு உள் பட அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆள் பாஸ் என அறிவிக்கும் நிலை தான் ஏற்பட்டது.
இதனிடையே முதல் கட்டமாக ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவாவது பள்ளிகள் செயல் பட திட்டமிட்ட தமிழக அரசு அதனை நடப்பு கல்வியாண்டில் தாமதிக் காமல் செயல்படுத்த முடி வெடுத்து, தமிழ்நாடு பள் ளிக் கல்வித்துறை மூலம் பாடப் புத்தகங்களை மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகிறது. இதனை யொட்டி பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழ் நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக வழங்கப்பட்ட பாடநூல் புத்தகங்கள் நேற்று முதல் அனைத்து ஒன்றியங்களில் உள்ள அரசு, ஆதி திராவிடர், மலைவாழ் மக்கள், அரசு நிதியுதவி பெற்றிடும் பள் ளிகளுக்கும் அனுப்பும் பணிகள் தொடங்கியது.
இதற்காக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு புனித பாத்திமா தொடக் கப் பள்ளி வளாகத்திலி ருந்தும், உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கு பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தி லிருந்தும் அனுப்பி வைக் கப்படுகிறது. இதன் படி 318 தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கும், 99 உயர் நிலை, மேல் நிலைப் பள் ளிகளுக்கும் என 322 அர சுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 417 பள்ளிக ளுக்கு பாடநூல் புத்தகங் கள் வந்துள்ளன.
இந்த பணி களை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலர் மாரிமீ னாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.