அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் . நேரடி வகுப்புகள் தொடங்க மாணவர்கள் எதிர்பார்ப்பு.
நெல்லை , ஜூன் 23: கொரோனா பரவல் குறைந்து வரும் நிலை யில் மாணவர்களுக்கு இணையதளம் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதையொட்டி முதற் கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று தொடங்கியது.
கொரோனா 2வது அலை பரவல் குறைந்துவரும் நிலையில் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான வகுப்பு கள் நடத்த தொடக்க கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றன. பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து பெரும்பாலான மாண வர்கள் விலகி அரசுமற் றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.
கடந்த 2ம்தேதி முதல் கல்வி தொலைக்காட்சி மூலம் 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப் புகள் நடத்தப்பட்டுவருகின்றன. காலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை பாடவாரியாக ஆசிரியர் கள், வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனி டையே ஆன்லைன் மற் றும் வாட்ஸ் அப் மூல மும் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான வழி காட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில் , புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பு விதி முறைகளை பின் பற்றி பாட புத்தகங்களை வழங்க கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நேற்று முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாண விகளுக்கு வகுப்பு வாரி யாக பாட புத்தகங் கள் வழங்கும் பணிகள் தொடங்கின.
நெல்லை ஜவஹர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர் களுக்கு மட்டும் சமூக இடைவெளியுடன் பாட புத்தகங்கள் வழங்கப்பட் டன. மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்து பாடபுத்தகங்களை பெற் றுக் கொண்டனர்.இதுகுறித்து தலைமை ஆசிரியை மாலா கூறு கையில், கடந்த ஆண்டும் இந்தாண்டும் மாணவ, மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எங்கள் பள்ளியில் ஆசிரியைகள் அதிக அளவில் பணி புரிகின்றனர்.
எனவே மாணவிகளும் தயக்க மின்றி பள்ளியில் சேர லாம் என்றார். இது போல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்களை மாணவ, மாணவிகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் தொடங்கிய போதிலும் பள்ளிகளை நேரடி யாக திறந்து வகுப்புகள் நடைபெறுவதை வர வேற்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். சில பள் ளிகளில் பெற்றோர் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.