புதுடெல்லி, ஜூன்.24பள்ளி - கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட் டன. ஸ்மார்ட்போன் மற்றும் இணைய தள வசதி ஆகியவை பெரும்பாலான மாணவ- மாணவிகளிடம் இல்லை . குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் ஒருசில மாணவ - மாணவிகள் ஸ்மார்ட் போன் இருந்தாலும் செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இதனால் பாடங்களைபடிக்க முடியவில்லை .
தற்போது இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியோடு, ஆளுமைத் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளுக்கு வரச் சொல்லலாம், நேரத்தை மாற்றியமைத்து மாணவர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்கலாம் என பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி - கல்லூரி திறப்பு குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.