தமிழ் வழி கல்வி அரசு பணியில் 20 % ஒதுக்கீடு உயர் நீதிமன்றம் நிபந்தனை
மதுரை, ஜூலை 20: தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத ஒதுக் கீட்டில், ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித் தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கி ழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20-இல் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 3-இல் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதன் தேர்ச்சி பட்டியல் பிப்ரவரி 9-இல் வெளியானது.
இப்பட்டியலில், தமிழ் வழிக்கல்விக்கான 20 சதவீத ஒதுக்கீட்டு சலு கையில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற உயர்நீதி மன்றத்தின் உத்தரவு பின்பற்றப்பட வில்லை.
மாறாக பட்டப்படிப்பை மட்டும் தமிழில் பயின்றவர்களுக்கும் 20 சதவீத ஒதுக்கீட்டு சலுகை வழங் கப்பட்டுள்ளது. ஆகவே குரூப் 1 தேர்வு முடிவை ரத்து செய்து, புதியப் பட்டியலை வெளியிட வேண்டும் என தஞ்சை யைச் சேர்ந்த அருண் உள்பட 6 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர்.ஏற்கெனவே, மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்குமாறு உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு மட்டும் தமிழ் வழிக்கல்வி சலுகையில் விலக்கு அளிக்க வேண் டும் எனவும், இந்த ஆண்டு பிப்ரவரி யில் வெளியிடப்பட்ட முடிவுகளை மாற்றம் செய்தால், அதிகாரிகளை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபா கரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங் கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கில வழியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலைக்காக பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழிக் கல்வி படித்தவர்களுக்கு 20 சதவீத சலுகை வழங்கலாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசுப் பணியில் சேருவதற்காக தமி முகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததாக சான்றிதழ்களை முறைகேடாக பலரும் பெற்றுள்ளதாவும், எனவே, தமிழ் வழிக்கல்வி 20 சத வீத ஒதுக்கீட்டில், ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் எனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தர விட்ட னர்.