ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
வேலூர், ஜூலை 21: கொரோனா பரவல் காரணமாக குழந்தைகளின் பள்ளிக்கல்வி கேள்விக்குறியாகி உள் ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் உயர்நிலை, மேல்நி லை பள்ளி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங் கப்பட்டது. தனியார் பள்ளிகளில் மட்டும் தொடக்கப்பள்ளி மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
இந்நிலையில் இந்த கல்வியாண் டில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 14ம் தேதி தொடங் கியது. இதற்காக தலைமை ஆசிரி யர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு தினந்தோறும் வந்து சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத் தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதா வது:அனைத்து வகை உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையா சிரியர்கள் தங்கள் பள்ளியில் பயி லும் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் புதியதாக உள் ளீடு செய்ய வேண்டும்.
அதில் புதிய விவரங்கள் மற்றும் அப்டேட்செய்ய வேண்டிய விவரங்களை உடனடி யாக செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் இப்பணியினை மேற்கொள்ளச் செய்து உடனடி யாக விரைந்து முடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 68 லட்சத்து 602 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 674 பேரின் விவரங்கள் மட்டும் பதிவு செய்யப் பட்டுள்ளது. மாநிலம் அளவில் 29 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக நாமக் கல் மாவட்டத்தில் 87 சதவீதமும், குறைந்தபட்சமாக அரியூலூரில் 0.4 சதவீதம் மட்டுமே பதிவு செய்துள் ளனர். வேலூர் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 555 பேருக்கு, 5 ஆயிரத்து 742 பேரின் அதாவது 8.9 சதவீதம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள் ளது. திருவண்ணாமலை மாவட்டத் தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 341 பேருக்கு, 43 ஆயிரத்து 967 பேரின் அதாவது 28.5 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இத போல் திருப்பத்தூர் மாவட்டத் தில் 54 ஆயிரத்து 273 பேருக்கு, 14 ஆயிரத்து 256 பேரின் அதாவது 26.3 சதவீதம் விவங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 62 ஆயிரத்து 802 பேருக்கு, 17 ஆயிரத்து 342 பேரின் அதாவது 27.6 சதவீதம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளை தலைமை ஆசிரி யர்கள் விரைந்து முடிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.