புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தால் ரூ.22 ஆயிரம் கோடி கிடைக்கும்
வேடசந்துார், ஜூலை 9'புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்தால் அரசுக்கு உபரி நிதியாக ரூ.22 ஆயிரத்து 774 கோடி கிடைக்கும்' என, சி.பி. எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய் வூதிய திட்டம் 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பிறகு பணியில் சேர்ந்த 5 லட்சத்து 72 ஆயிரம் ஊழியர்களில், ஓய்வு பெற்றோர் முறையான பென்ஷன் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்ற பிரடெரிக் ஏங்கல்ஸ்னர். அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய தொடர்ந்து போராடி வருகிறோம். முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்களது வாக்குறுதிப்படி செயல்படுத்த வேண்டும்.
அவ்வாறு செயல்படுத்தினால் ரூ.22 ஆயிரத்து 774 கோடி அரசுக்கு உபரிநிதியாக கிடைக்கும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதால், மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தும் பங்களிப்பு தொகை மற்றும் அதற்கான வட்டி மூலம் ஏற்படும் நிதிச்சுமை குறையும் என்பதை விளக்கி கூறியுள்ளோம், என்றார்.

Tags (Don't Read This) :-