இன்ஜினியரிங் , கலைக் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
சென்னை, ஜூலை 20: பன்னி ரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இன்ஜினியரிங் மற்றும் கலைக்கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் 26ம் தேதி முதல், மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூவர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சிறப்பு விரிவுரையாளர்கள், தங்களை தொடர்ந்து பணியாற்ற அனு மதி அளித்ததற்கு தலைமை செயலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன் மு டியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பொன் முடி நிருபர் களுக்கு அளித்த பேட்டி: திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிறப்பு விரி வுரையாளர்கள், தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறப்பு விரிவுரையாளர்களுக்கு நேர்முகத்தேர்வு என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்ததை நிறுத்தி, இவர்கள் தொடர்ந்து பணியாற்றவும் பணிமூப்பின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, யுஜிசி தகுதி பெற்றவர்களுக்கு அதன் அடிப்படையில் மதிப் பெண்கள் வழங்கப்பட்டு அவர் கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபின்னர் முறையாக அறிவிக் கப்படும்.
இப்போது, சிறப்பு விரிவுரை யாளர்களாக இருப்பவர்கள், எந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்களோ அதே பல் கலைக்கழகத்தில் தற்போதும் இருக்கலாம். அவர்களை தேர்வு செய்வதற்கான முடிவுகள் பின் னர் அறிவிக்கப்படும். கடந்த ஆட்சியில், சிறப்பு விரிவுரையா ளர்களை நிரந்தரம் செய்வதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இது பல்வேறு ஊழல் களுக்கு இடமளித்துள்ளதை அறிந்து அந்த கமிட்டி கலைக்கப்பட் டுள்ளது. தற்போது ஒழுங்கான முறையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விரிவுரையாளர்களுக்கு தேர்வு நடைபெ றும். எனவே, அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செய்ய லாம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பிளஸ் 2 மதிப் பெண்களை அறிவித்துள்ளார். இந்த மதிப்பெண்கள் மாண வர்களுக்கு வரும் 22ம் தேதிஅனுப்பிவைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பெண்கள் மாணவர் களுக்கு சென்றடைந்த உடன் தமிழகத்தில் உள்ள இன்ஜினிய ரிங் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு வரும் 26ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ மதிப் பெண்கள் 31ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாதம் மாணவர்களுக்கு அவ காசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் மாணவர்கள் விண் ணப்பிக்கலாம். விண்ணப் பங்கள் மூலம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப் படுவார்கள். இதற்கான பணிக ளில் அனைத்து கல்லூரிகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.