ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்குவதற்கான பட்டியல் சேகரிப்பு : கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு
வேலூர், ஜூலை 20: ஆன் லைனில் வகுப்புகளில் பங்கேற்க கல்லூரி மாண வர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்க பட்டியல் அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் பூர ணசந்திரன், அனைத்து மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்ப தாவது : தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைய வ ழி பாடம் கற்க ஏது வாக கடந்த முறை 2ஜி சிம் கார்டு வழங்கப் பட்டன.
அதன் செல்லுபடியான காலம் 4 மாதங்கள் முடிவுற்றன. எனவே தற் போது 2020-2021ம் கல் வியாண்டில் இளநிலை 3ம் ஆண்டு மற்றும் முது நிலை 2ம் ஆண்டு பயிலும் மாணவர்களும் தங்கள் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள சூழலில் புதிய கல்வியாண் டில் இளநிலை 2ம் ஆண்டு 3ம் ஆண்டு பயில உள்ள மாண வர்களுக்கும் இணைய வழிப் பாடம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அவர் களுக்கும் சிம்கார்டு அவ சியமாகிறது.
எனவே 2021-2022ம் கல்வியாண்டில் உள்ள இளநிலை 2, 3ம் ஆண்டு மற்றும் முது நிலை 2ம் ஆண்டு , எம் பில் முத லாமாண்டு இளநிலை, முதுநிலை பயில உள்ள அரசு மற்றும் அரசு உத வி பெறும் (மானியம் பெறும் பாடப்பிரிவுகள் மட்டும்) அரசு உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண் ணிக்கையை கல்லூரி வாரியாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாரியாகவும் பெற்று தொகுத்து வழங்க வேண் டும். மாணவர்களின் எண் ணிக்கை சரியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.