12ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு

12ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு : அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சி.உஷாராணி ஆணை வெளியீடு.

மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட, சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது, மேல்நிலை இரண்டாமாண்டு (+2) தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரிய வருகிறது.

எனவே, தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியல்களில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர், (ஆங்கிலம் / தமிழ்) பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி (Medium), மொழிப்பாடம் (First Language) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும், பள்ளியின் பெயரில் (ஆங்கிலம் / தமிழ்) திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பலமுறை மாணவர்களது பெயர்பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது பல சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை தலைமையாசிரியர்களுக்கு உணர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கோ அல்லது அரசுத் தேர்வுகள் இயக்கக்கத்திற்கோ கடிதங்கள் அனுப்பி இருப்பினும், மீளவும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பெயர்ப் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களின் விவரங்களை (மாணவர்களின் தேர்வெண்ணுடன்), தெளிவாக பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் 28.07.2021-க்குள் ஒப்படைக்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 29.07.2021 பிற்பகல் முதல் 31.07.2021 ஆகிய நாட்களில் அரசுத் தேர்வுத் துறை இணையதளத்தில் தங்களுக்கான User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலை பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட திருத்தங்களை பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வர்களது நலன் கருதி, பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு, சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது.

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இப்பொருள் குறித்து விரைந்து சுற்றறிக்கை அனுப்புமாறும், இப்பணிக்கு அதிமுக்கியத்துவம் அளித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Tags (Don't Read This) :- 

      Tn Breaking News , 10th Breaking News , tn school reopens , 11th school reopens , 12th school reopens , 12th public Exam , 11th Public Exam , 10th Public Exam , SSLC Exam , Breaking News , tn educational Breaking News , tn news , tn educational News , tn educational News breaking , breaking Tn educational News , tn school reopens , tn 10th School Reopens , School Reopens Official Announcement , exam cancelled , 10th exam cancelled , 10th exam date , 12th public exam date , 11th public exam date , SSLC Public Exam date , 11th Public Exam Time Table 2021-2022 , 11th Public Exam Official Announcement , 12th Public Exam Time Table 2021-2022 , 12th Public Exam Official Announcement , 10th Public Exam Time Table 2021-2022 , 10th Public Exam Official Announcement ,

Post a Comment

Previous Post Next Post
Loading...