ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அலகுத்தேர்வு : காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணக்கர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த மாதம் தோறும் அலகு தேர்வுகள் நடத்துவதற்கு அரசு கல்வி தொலைக்காட்சி அட்டவணைப்படி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து 50 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடம் நடைபெறும் தேர்விற்கான, தேர்வு அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கீழ்வரும் அலகு தேர்விற்கான வழிமுறைகளை பின்பற்றி, மாணாக்கர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வினை எழுதிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அலகு தேர்வு வழிமுறைகள்
- தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி இணையதள வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்வதை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
- மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த ஆயத்த பயிற்சி மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
- ஒவ்வொரு பாடத்திலும் அலகுத்தேர்வுகள் மாதவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடத்திட்டத்தின்படி அலகுத் தேர்வு நடைபெற வேண்டும்.
- 12ம் வகுப்பு அலகு தேர்விற்கான நேரம் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை, மதிபெண்கள் 50, மற்றும் 10-ஆம் வகுப்பிற்கான அலகுத் தேர்விற்கான காலம் மதியம் 2.00 மணி முதல் 3.30 மணி வரை, மதிப்பெண்கள் 50.
- ஒவ்வொரு அலகுத் தேர்விற்கான வினாத்தாட்களை இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- அலகுத் தேர்வுகள் கீழ்கண்ட விவரப்படி ஒவ்வொரு மாத இறுதியில் நடைபெறுதல் வேண்டும். அதற்கான தேதியினை பின்னர் அறிவிக்கப்படும்.
- ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும்.
- மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும். இக் குழுவில் தலைமையாசிரியர் இடம்பெறுதல் வேண்டும்.
- தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும்.
- மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்தல் வேண்டும்.
- விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர், பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் எழுதப்படுதல் வேண்டும்.
- அனைத்து விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில் மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும்.
- எழுதப்பட்ட விடைத்தாட்களை செல்போனில் படம் எடுத்து Whats app மூலமாக பாட ஆசிரியர்களுக்கு அனுப்பலாம் அல்லது பெற்றோர்கள் மூலம் பள்ளியில் விடைத்தாள்களை சமர்பிக்கலாம்.
- Whats app வசதி இல்லாத மாணவர்கள் அருகில் உள்ள மாணவர்களை அணுகி வினாக்களை பெற்று விடை அளிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
- Whats app மூலம் மட்டுமே அனுப்பப்பட்ட விடைத்தாள்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
- ஒவ்வொரு பாட ஆசிரியரும் தங்கள் பாடத்திற்குரிய மதிப்பெண் பட்டியலை தயார் செய்தல் வேண்டும்.
- வகுப்பு ஆசிரியர் அனைத்து பாட ஆசிரியர்களிடமிருந்து மதிப்பெண் பட்டியலை பெற்று தொகுப்பு மதிப்பெண் பட்டியலை தயார் செய்து தலைமையாசிரியரிடம் வழங்க வேண்டும்.
- வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்பதை ஆசிரியர்கள்/வகுப்பாசிரியர்கள் தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு அலகுத் தேர்விற்கு பின்பு தலைமையாசிரியர்கள் பணிகள்
- தலைமையாசிரியர் அனைத்து வகுப்பாசிரியர்களிடமிருந்து தொகுப்பு மதிப்பெண் பட்டியல்களை பெற்று ஆய்வின் போது சமர்பித்தல் வேண்டும்.
- 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்திட மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி கற்றல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சார்ந்த பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
- மாதந்திர பாடத்திட்டத்தை முன்கூட்டியே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவித்திட வேண்டும்.