மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் தமிழில் பாட புத்தகங்கள் : திண்டுக்கல் லியோனி
சென்னை , ஜூலை 21: திரு வள்ளூரில் உள்ள தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன வளாகத்தில் உள்ள தமிழ்நாடுபாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியி யல் பணிகள் கழக தலை வர்திண்டுக்கல் லியோனி நேரில் சென்று ஆய்வு செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட் டத்தில் மொத்தம் 860 பள்ளிகள் உள்ளன. அதில் 400 பள்ளிகளுக்கு தேவை யான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீத முள்ள 460 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
பள்ளிகள் திறக்கப்ப டும் தேதியை தமிழக முதல மைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோர் முடிவு செய்த பிறகு மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங் கப்பட்டு கல்விப் பணி சிறப்பாக செயல்படும்.
திருவள்ளூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட் டும் பணி சிறப்பாக நடக்கிறது. விரைவில் இக்கல்லூரிசெயல்படும். பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் அச்சடிக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இதை எங்களுக்கு மிகப் பெரிய பொறுப் பாக ஏற்றுக் கொண்டுள்ளோம். கிராமப்புற மாண வர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
தாய்மொழியில் பொறி யியல் மற்றும் மருத்துவக் கல்வி புத்தகங்களை அச் சிட்டு வழங்க அண்ணா , கலை ஞர் ஆகியோர் கண்டகனவை நனவாக்கி, தாய்மொழியில் உயர்கல்வி படித்தல் என்ற முதல்வரின் உயரிய லட்சியத்தை பாட நூல்கழகம் விரைவில் நிறைவேற்றும். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தமிழ் வழியில் புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
அவருடன் எம்எல்ஏ வி. ஜி. ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.திரா விடபக்தன், களாம்பாக் கம் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் ரவிச்சந் திரன் உள்பட பலர் இருந்தனர்.