ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 58 ஆக குறைக்காமலேயே - லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கித்தர முடியும் - இதை கனிவுடன் பரிசீலிக்குமாறும், ஓய்வு பெறும் வயதை 60 ஆக தொடர்ந்து நீட்டிக்கச் செய்யுமாறும் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை.
தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து, அனைத்துத் தரப்பு மக்களும், பாராட்டக்கூடிய வகையிலும், போற்றிப் புகழக்கூடிய வகையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருவதைக் கண்டு நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருக்கிறது. தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிகளுக்காக தங்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், மனமார்ந்த மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். சமீப காலமாக தங்களுடைய அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 58ஆக குறைக்கப்பபோகிறது என்ற செய்தி தமிழ்நாட்டில் வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்த செய்திகள்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைக்காமலேயே ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கித்தர முடியும்.
ஒய்வு வயதை குறைக்காமலேயே எப்படி வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்பதை அரசுக்கு தெளிவாக கூற முடியுமா ?
ReplyDelete