பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேட்டி.
9 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேட்டி.
இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் , அப்போது செய்தியாளர் ஒருவர் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து நமது முதல்வர் பல துறை அதிகாரிகளுடனும் மருத்துவ நிபுணர் குழு களுடனும் ஆலோசனை செய்த பிறகே அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.