மலை கிராமங்களில் வேன்கள் மூலம் நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம் பழங்குடியின மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு
மாணவ, மாணவிகளின் கல்விச் செயல்பாடுகள், கடந்த இரு ஆண் டுகளாக பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இணையதள வசதி இல்லாததால், தனியார் பள்ளி மாணவர்கள் கூட ஆன்லைன் மூலம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களை கருத்தில் கொண்டு, 'நடமா டும் கல்வி கற்பிக்கும் திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக, சென்னை , கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, தேனி, தென் காசி, திருப்பத்தூர், வேலூர், விழுப்பும், சேலம், திருச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 19 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள் ளது. அதன்படி, வாகனங்கள் மூலம் மலைக்கிராமங்களுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, பழங்குடியி னர் நல இயக்குநர் ராகுல், தமிழ கத்தில் உள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் செயல்படவில்லை . இதனால், மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ, மாண விகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளது. இந்நி லையில், அவர்களின் கல்விய றிவை மேம்படுத்தும் வகையில் 'நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டம்' அமல்படுத்தப்படுகிறது.
நடமாடும் வாகனங்களை கொண்டு மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தினசரி பாடம் கற்பிக்க நடவடிக்கை மேற் கொண்டு, இத்திட்டத்தை செம் மையாக செயல்படுத்த வேண் டும். எனவே, மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை கண்ட றிய வேண்டும். பின்னர், அக் கிராமங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித் திட ஏதுவாக, சிறிய வாகனங்கள் மூலமாக, பழங்குடியினர் நலத்துறையின் நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும்.
இதற்கான செலவின தொகை மாவட்ட அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் பட்டியல்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
பாடம் கற்பிப்பதற்காக, ஏற்கனவே பழங்குடியினர் நலத் துறை பள்ளிகளில் சிறப்பாசிரியர்களாக பணி புரிந்த உள் ளூர் ஆசிரியர் களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தும் வகையில், மலைக்கிராமங்க ளின் தொடக்க மற்றும் நடுநி லைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசி ரியர்களைக் கொண்டு, தின சரி கிராமம் வாரியான கால அட்டவணை தயார் செய்து நடைமுறைப்படுத்த சம்பந்தப் பட்ட ஆசிரியர்களுக்கு அறிவு றுத்த வேண்டும்.
இத்திட்டம் செயல்படுவது தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய அறிக்கை யினை, ஒவ்வொரு வார முதல் மற்றும் இறுதி நாளன்றும் இயக்குநரகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது