ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்வு அமைச்சரவையில் ஒப்புதல்
புது டெல்லி, ஜூலை 15: ஒன்றிய அரசு ஊழியர் களுக்கான அகவிலைப் படி உயர்வு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு ஒப் புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழி யர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகி றது. விலைவாசி உயர்வுக் கேற்ப ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப் படி உயர்வு அறிவிக்கப்ப டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரண மாக கடந்த ஓராண்டுக்கு மேலாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங் காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந் தது. இதில், அரசு ஊழியர்க ளின் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்த ஒப்பு தல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஒன் றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு ஜனவரி 1, ஜூலை 1 மற் றும் ஜனவரி 1, 2021 வரை யிலான அகவிலைப்படி, ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணத்தின் 3 கூடுதல் தவணைகளை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள் ளது.
ஜூலை 1ம் தேதி முதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ஓய் வூதியத்தில் 17 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 28 சதவீதமாக, அதாவது 11 சதவீதம் உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் உயர்வினால் அரசுக்கு கூடுதலாக 34,401 கோடி செலவாகும். இதன் மூலம் 48.34 லட்சம் ஒன்றிய அரசின் ஊழியர்கள், 65.26 லட்சம் ஓய்வூதியம் பெறுப வர்கள் பயனடைவார்கள்.
2021 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையி லான காலகட்டத்திற்கான அகவிலைப்படி மற்றும் அக விலை நிவாரணம் 17 சதவீதமாக இருக்கும். ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020, மற்றும் ஜனவரி 1, 2021 மூலம் உருவாகியுள்ள கூடு தல் தவணைகளை இந்த அகவிலைப்படி, அகவிலை நிவாரண உயர்வு பிரதிப லிக்கிறது. ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை யிலான காலகட்டத்திற்கு நிலுவை தொகை எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தேசிய ஆயுஷ் திட்டத்தை ஒன்றிய நிதி உதவி திட்டமாக, மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதா வது ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026வரை 74607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக ரூ. 3000 கோடி, மாநில அரசின் பங்காக ரூ. 1607.30 கோடி) தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கால்நடை வளர்ப்பு திட் டம், சிறப்பு கால் நடை தொகுப்பு திட்டத்தை மேம்படுத்தவதற்காக பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவை 154,618 கோடி ஒதுக்கி ஒப்பு தல் அளித்துள்ளது