12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி?

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி? மாணவர்கள் ‘ஷாக்’ –ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

     நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், ₹275 செலுத்தி, 3 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வாங்கியுள்ளனர்.  

  • மாணவர் 1 - CHEMISTRY - வழங்கிய மதிப்பெண்கள் : 57/70. (87/100). ஆனால் கூட்டும் போது - 67/70 (97/100) 
  • மாணவர் 2 - PHYSICS - வழங்கிய மதிப்பெண் - 42/70 (THEORY) | That is, 72/100 (TOTAL) கூட்டும் பொழுது - 52/70 (82/100).  
  • மாணவர் 3 - COMPUTER SCIENCE - வழங்கிய மதிப்பெண் - 55/70 (85/100). கூட்டும் பொழுது - 65/70 (95/70).

AE, SO, CE என மூன்று ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்தும் கூட, மதிப்பெண் பக்கம் (MARKING PAGE) கூட்டுத்தொகையில் AE செய்த சிறு தவறை கூட SO/CE-ஆல் கவனிக்க இயலவில்லையா?

     இதற்காக ₹275 விடைத்தாள் நகல்..பிறகு ₹205 மறுகூட்டல்... மறுகூட்டல் விண்ணப்பிக்க மாவட்ட தலைநகர் செல்ல அலைச்சல்..  வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களால் இதை நிச்சயமாக செய்ய இயலாது... அவர்களில் எவருக்காவது இப்படி தவறு ஏற்பட்டு இருந்தால் கூட, விடைத்தாள் நகல் வாங்க இயலாது..

    தவறு பள்ளிக்கல்வித்துறை மேல் இருக்கும் நிலையில், மாணவர் செலவிட்ட ₹275+₹205-ஐ திருப்பி கொடுக்க வேண்டும் அல்லவா?   வேதியியலில் 97 மதிப்பெண்கள் வாங்கவேண்டிய மாணவருக்கு 87 வழங்கியிருப்பது, அந்த மாணவருக்கு பல வாய்ப்புகளை‌ இழக்க வைக்கிறது. 

     ஒருவேளை அவரால் விடைத்தாள் நகல் வாங்க பணம் இல்லையென்றால், அவருக்கு இதே 87/100 இறுதியாக இருக்கும்... பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருக்கும்..  சம்பந்தப்பட்ட மதிப்பீட்டாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர்களுக்கு வழங்கிய மதிப்பெண் தவறாக இருப்பதால், அவர்கள் செலுத்தும் தொகையை திருப்பி அளிப்பதே நீதி.

    கடந்த May மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்தபின், தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சில ஆசியர்கள் மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த ஆசிரியர்கள் விடைத்தாளை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

      விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்கள், தங்களது விடைத்தாள் நகலில் தவறுகளை கண்டறிந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பெற்ற மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் போன்ற முக்கியமான பாடங்களில் இந்த குளறுபடி அதிகளவில் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

     குறிப்பாக, ஒரு மாணவர் வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், அவரது உண்மையான மதிப்பெண் 67 ஆக உள்ளது. இதேபோல் இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவருக்கு குறைந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இது அவரது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆசிரியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் என் 80பேர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும், மெமோ வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படலாம் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

Previous Post Next Post
Loading...