தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்சி பள்ளிகள் நாளை முதல் இயங்காது என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் தனியார் பள்ளி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு வகுப்பறைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் சேதப்படுத்தப்பட்டு பள்ளியை கலவர பூமியாக மாற்றியதற்காக இந்த வேலை நிறுத்த போராட்டத்தை சங்கத் தலைவர் நந்தகுமார் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாளை அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும் அச்சங்க தலைவர் திரு. நந்தகுமார் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ அந்த அளவு பாதுகாப்பு பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் இது தொடர்பாக தமிழக அரசு தங்களை இரண்டு நாட்களுக்குள் அழைத்துப் பேசவில்லை என்றால் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு இல்லாத பாதுகாப்பு அந்த பள்ளிக்கு எதற்கு?
ReplyDeleteஇதுவரை 7 மாணவர்கள் அந்த பள்ளியில் இறந்து இருக்கிறார்கள் இவர்களுக்கு நீதி யார் கொடுபா?