அரசு பள்ளிகளில் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக புதிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில் மடிக்கணினி வழங்குவது தொடர்பாக புதிய அறிவிப்பு

      அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா அடிக்கடி வழங்கப்பட்டது போக மாவட்டங்களில் இருப்பிலுள்ள விலையில்லா மடிக்கணினிகளை மாணவர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலமாக அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வுக்கூடத்திற்கு வழங்கிட பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன்படி அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தால் மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட உள்ள பயிற்சிக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மீதம் உள்ள மடிக்கணினிகளை வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேவையான மடிக்கணினிகளை காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும்.
  • திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தேவையான மடிகணினிகளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும்.
  • தென்காசி மாவட்டத்திற்கு தேவையான மடிக்கணினிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும்.
  • கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான மடிக்கணினிகளை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும்.
  • மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு தேவையான மடிக்கணினிகளை சிவகங்கை மாவட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும்.
  • மயிலாடு துறை மாவட்டத்திற்கு தேவையான மடிக்கணினிகளை கடலூர் மாவட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளவும்.

என்று தமிழக தொழிற்கல்வி இணை இயக்குனர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
Loading...