ஜூலை 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் இவ்வாண்டிற்கான கல்வி வளர்ச்சி நாளிலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களிலும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருஉருவப்படத்தை அலங்கரித்து விழாவினை கொண்டாடவும் அவர்களின் குறித்து மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடியதற்கான விபரங்களை தொகுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்வாணையரகத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்