மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்வு, மே 2022 - பள்ளி மாணவர்கள் பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு
12ம் வகுப்பு பொதுத்தேர்வு May 2022 முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியான நிலையில் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயர் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய மாணவர்கள் நாளை முதல் 16அம் தேதிக்குள்ளாக தங்கள் பயின்ற பள்ளியில் சென்று திருத்தம் மேற்கொள்ள முடியும்.
நாளை (08.07.2022) நண்பகல் முதல் ஜூலை 16ஆம் தேதி 2022 வரை பள்ளி நிர்வாகம் அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் தங்கள் பள்ளி USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி மாணவர்களின் பெயர் பட்டியலை திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இதுதான் மாணவர்களின் கடைசி வாய்ப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை அவகாசம் வழங்கப்பட்டிருப்பினும் 12ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு பல பள்ளிகள் மற்றும் மாணவர்கள் இடமிருந்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு வந்து கொண்டிருந்தன எனவே இதை கடைசி வாய்ப்பாக வழங்கப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த பள்ளி நிர்வாகம் ஆசிரிய பெருமக்களுக்கும் பகிரவும்.
Tags:
TN Educational News