தமிழக பொறியியல் கலந்தாய்விற்கு 1,47,947 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு இதுவரை 1,47,947 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,00,923 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 69,615 பேர் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
தமிழக பொறியியல் கலந்தாய்விற்கு ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்னும் 13 நாட்கள் மீதம் உள்ளது. இருந்தாலும் இன்றளவும் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி குழம்பி வருகிறார்கள். சிபிஎஸ்இ பொது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்றளவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.