கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தேவசம் தொகுதிக்குட்பட்ட திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் நாளை மகா குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த அரசாணையில் குறிப்பிட்டதாவது
"கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் கோரிக்கையினை அரசு கவனத்துடன் பரிசீலித்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தேவசம் தொகுதி திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற உள்ள மகா குடமுழுக்கு நாளான 06.07.2022 புதன்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலர்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது."
"மேலும் அந்த விடுமுறை ஈடு செய்யும் பொருட்கள் நடைபெறும் மாதத்திலோ அல்லது அதற்கு அடுத்த மாதத்திலோ ஒரு சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்க அவர் அறிவுறுத்தப்படுகிறார் மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலாவணி முறை சட்டம் 1881 கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்களுக்கு குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று தமிழ்நாடு அரசு செயலாளர் டி ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்."