தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் !
கடந்த கல்வியாண்டில் (2021-2022) 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. எனவே ஜூன் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் ஜூலை 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
tngasa.in , tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எனவே இன்றுடன் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிகின்றது. எனவே தங்களுக்கு தெரிந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து உதவும்.
மேலும் தமிழ்நாட்டில் பொறியியல் மாணவ சேர்க்கைக்கு ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் அறிவித்திருந்தார் ! சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி சிபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது !