தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் சர்ச்சைக்கு இடமில்லை - அமைச்சர் விளக்கம்
சென்னை, ஜூலை 4: தற்காலிக ஆசிரியர் கள் நியமனம் எவ்வித சர்ச்சைக்கும் இட மில்லாத வகையில் நடைபெற்று வரு வதாக பள்ளிக் கல் வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022–2023-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசி ரியர் நியமனம் மேற்கொள்ளப் பட உள்ளது. இதில் விதிமுறை களை மீறி நியமனம் செய்யப்ப டுவதாகவும், தகுதி இல்லாதவர் களுக்கு வாய்ப்பு அளிக் கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
Rules and Regulations for Appointment of Temporary Teachers
Temporary Teachers Application form (without Watermark)
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் அன் பில் மகேஸ் பொய்யா மொழி சென்னையில் திங்கள்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியதாவது : தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சை யும் கிடையாது. முதல்வரின் அறி வுரைப்படியே தற்காலிக ஆசிரி யர் நியமனம் நடைபெற்று வருகி றது. நிரந்தர ஆசிரியர்களை நிய மிப்பதற்கான பணிகளும் நடை பெற்று வருகின்றன. எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விரை வில் ஆசிரியர்கள் நியமனம் செய் யப்படுவர். இது குறித்த வழிகாட் டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடை யாது என்றார் அவர்.