திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சேவூர் கிராமத்தின் மாணவர்கள் காலாண்டு தேர்வுகளை புறக்கணித்து சாலை மறியல் !
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம், சேவூர் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பதினோராம் வகுப்பு மாணவர் சிகரெட் பிடித்து அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவியின் முகத்தில் சிகரெட் புகையை விட்டதாக கூறப்படுகிறது. இதன் பெயரின் மாணவியின் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டு ஆசிரியர்கள் நான்கு பேர் மாணவனை கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவனின் பெற்றோர்கள் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்து பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பணியாற்றிய இரண்டு ஆசிரியர்களை பணியிட நீக்கம் செய்தும் இரண்டு ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்தும் உத்தரவிட்டிருந்தார்.
பணியிடை நீக்கம் செய்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பணி இடை மாற்றம் செய்த இரண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் தற்போது நடந்து கொண்டிருக்கும் காலாண்டு தேர்வுகளை புறக்கணித்துவிட்டு ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் வழியில் சேவூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.