Tamil nadu Quarterly Exam Time Table 2022 PDF Download

 Tamil Nadu All Districts Quarterly Exam Time Table 2022

Tamil Nadu Quarterly Exam Time Table

 
   தமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற பொது காலாண்டு தேர்வு என்பது 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற காலாண்டு தேர்வு அதன்பிறகு இரண்டு கல்வி ஆண்டுகளில் கொரோனா பரவு காரணமாக காலாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை எனவே கடைசியாக நடைபெற்ற காலாண்டு தேர்வானது பொது காலாண்டு தேர்வு அதாவது தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளி என அனைத்து வகை பள்ளிகளுமே ஒரே வினாத்தாளை பயன்படுத்தி தேர்வு எழுதினர் 

     இந்த வருடமும் அதே போன்ற ஒரு முறை தான் இருக்கும் என்று பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை மே மாதம் வெளியிட்ட கல்வியாண்டு நாள்காட்டியிலும் காலாண்டு தேர்வு அட்டவணை கொடுக்கப்பட்டு இருந்தது எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த ஆண்டும் காலாண்டு பொதுத் தேர்வாகவே நடைபெறும் என்று இருந்தனர். 

     ஆனால் தற்போது தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் இந்த வருடம் காலாண்டு தேர்வானது பொது காலாண்டு தேர்வாக இருக்காது என்று சந்தேகம் எழுந்தது இதை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தீர்க்க வேண்டும் என்று நமது குழு சார்பாக ஓரிரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் பேசிய போது அவர்கள் தெரிவித்ததாவது இந்த வருடம் ஒவ்வொரு மாவட்ட அளவிலேயே காலாண்டு தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தனர். 

    எனவே தற்போது நமக்கு கிடைக்கப்பெற்ற காலாண்டு தேர்வு அட்டவணைகளை கீழே வழங்கியுள்ளோம் இதேபோன்று தங்களுடைய மாவட்டத்திற்கு காலாண்டு தேர்வு அட்டவணை வழங்கப்பட்டிருந்தால் அதையும் நமது kalvikadal.in@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9385336929 என்ற வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். 

இந்த அட்டவணையை தங்களுக்கு தெரிந்த மாணவர் செல்வங்களுக்கு பகிர்ந்த உதவவும்.

Tamil Nadu District Wise Quarterly Time Table (PDF)

 

Post a Comment

Previous Post Next Post
Loading...