TNEA 2022 : இறுதிச் சுற்று மாணவ, மாணவிகளுக்கான அறிவுரைகள்

TNEA  2022 : நான்காவது மற்றும் இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான அறிவுரைகள் மற்றும் தகவல்கள்

    நாளை (29.10.2022) முதல் மூன்று நாட்கள் வரை Choice Filling செய்து Lock செய்திட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர்  எவ்வளவு வேகமாக Lock செய்கிறோமோ அவ்வளவு நல்ல கல்லூரிகள் கிடைத்துவிடும் என்ற தவறான வழிநடத்துதல் காரணமாக தவறு செய்து சிறந்த கல்லூரிகளை விரும்பிய பாடப்பிரிவினை இழந்து விடுகிறார்கள். ஆகவே அதில் கவனம் எடுத்துக் கொள்ளவும்.

     நீங்கள் எந்தக் கல்லூரிகளையெல்லாம் தெரிவு செய்கிறீர்களோ அக்கல்லூரியின் Counseling Code, கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணம், Placement History, Infrastructure என  அனைத்தையும் முழுமையாக அறிந்தபிறகே Choice Fillingயில் Add செய்யவும்.


   எக்காரணம் கொண்டும் எந்தவொரு Trust / Consultancy / Collge-க்கும் Username மற்றும் Password தெரியப்படுத்த வேண்டாம். அவர்கள் வசதிக்கேற்ப தவறாக Choice Filling செய்திட அது வழிவகுக்கும். தாங்கள் முழுமையாக பலமுறை சரிபார்த்து திருப்தி அடைந்தபிறகு OTP பெற்று Choice Lock செய்யவும்.

   குறிப்பாக ECE / EEE / CIVIL / Mechanical / Mechotronics உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முற்றிலும் கட்டணமின்றி இலவசமாக படிக்கும் வாய்ப்பினை பல முன்னணி கல்லூரிகள் வழங்குவதால் அதனைத் தெரிந்து கொண்டு முடிவெடுக்கவும்.

Post a Comment

Previous Post Next Post
Loading...