தமிழ்நாடு பொறியியல் கலந்தாய் விற்க விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழகத்தில் உள்ள 480க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மே ஐந்தாம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை கால அவகாசமானது வழங்கப்பட்டது. இந்த நிலையில் நாளை இந்த கால அவகாசம் முடிவடைகிறது.
விண்ணப்பங்களை நிரப்பினால் மட்டுமே தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும். தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள், மேலும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9ஆம் தேதி கடைசி நாள்.
இதன் பிறகு ரேண்டம் என்னானது ஜூன் 6-ம் தேதி வழங்கப்பட உள்ளது அதன் பிறகு ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூன் 26 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் மேலும் ஏதேனும் குறைகள் இருப்பின் குறைதீர்ப்பு முகமானது ஜூன் 26 ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும்.
பிறகு ஜூலை இரண்டாம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூலை ஏழாம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் இந்த பதிவை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பகிரவும் யாரேனும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் நாளைக்குள் பூர்த்தி செய்ய அறிவுறுத்தவும்.
Tags:
TNEA Counseling