படித்துக் கொண்டே மாதம் 8000 முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் - மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு
டிப்ளமோ இன் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னாலஜிஸ் (Diploma in Manufacturing Technology) என்ற ஒரு புதிய படிப்பினை தமிழ்நாடு அரசு மற்றும் டாடா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவல்களை பார்ப்போம்.
பெரும்பாலும் டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது அதேபோன்று இந்த படிப்புக்கும் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை போதுமானது. இதில் வருடத்திற்கு மூன்று மாதங்கள் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்புகளை படிக்க வேண்டி இருக்கும் மீதம் இருக்கக்கூடிய ஒன்பது மாதங்கள் டாட்டா நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை.
வெற்றிகரமாக பட்டப்படிப்பு முடிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் 2 லட்சம் வழங்கப்படும். மேலும் அந்த ஒன்பது கால பயிற்சி காலத்தில் தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம். பட்டப்படிப்பு முடித்தவுடன் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பு படிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பட்டப் படிப்பில் மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எங்களுக்கு தொடர்பு கொள்ளவும் அல்லது தங்கள் அருகாமையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளை அணுகவும்.