12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் / மறு கூட்டலுக்கான விண்ணப்புக்கு முறை

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் அல்லது மறு கூட்டலுக்கான விண்ணப்புக்கு முறை பற்றிய செய்தி குறிப்பினை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 

12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் / மறு கூட்டலுக்கான விண்ணப்புக்கு முறை 
அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது...


   விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 07.05.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல் 11.05.2024 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

   விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். 

    மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post
Loading...