ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் 30 நாள் பயிற்சி : ஜூலை 19ல் தொடங்குகிறது
நெல்லை, ஜூலை 14: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், ஆண்டுதோறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் ஆங்கில கல்வி கற்பிக்கும் அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரி யர்களின் ஆங்கில கல்வி புலமையை மேம்படுத்த 1 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் அங்கிலப்பாடங்களை மெல்ல கற்கும் மாணவர் களை எப்படி கையாள் வது. மாணவர்களுக்கு சுலபமான முறையில் ஆங்கில போதனை, ஆங் கில இலக்கிய பாடங்கள் கற்பித்தல் முறை, ஆங்கில கல்வி தொடர்பான சிறு குறு தேர்வுகளை நடத்தி மாணவர்கள் தயக்கமின்றி ஆங்கிலம் கற்பது மற்றும் ஆங்கிலத் தில் சரளமாக பேசுவது போன்ற உரையாடல், சிறு ஆங்கில நாடகம் நடத்துதல் இணையதளம் மற்றும் கல்வி தொலைக் காட்சி, ரேடியோ கல்வி ஒலிபரப்பு மூலம் மாண வர்களுக்கு புரியும்படி பாடம் நடத்துவது தொடர்பான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்ப டும். இதில் ஏராளமான ஆங்கில ஆசிரியர்கள் பங்கேற்று பயனடைகின்றனர்.
வழக்கமாக பெங்களூரில் வைத்து இந்த பயிற்சி அளிக்கப்படும். தற்போது கொரோனாவைரஸ் பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டிற்கான இந்த பயிற்சி முகாம் ஆன்லைனில் நடத்தப்படும் என இதன் இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் நடப்பு கல்வியாண்டிற்கு தமிழக பள்ளிகளின் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வருகிற 19ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 1ம் தேதி வரை ஆன்லை னில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட் டத்தில் இருந்தும் தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலா 30 ஆசிரியர்கள் பயிற்சி பெற இந்த வாய்ப்பு அளிக் கப்படுகிறது. இதற்கு தகு தியும் விருப்பமும் உள்ள வர்களின் பட்டியல், ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு இத்து றைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள ஆசிரியர் பயிற்சிப்பள்ளியின் பயிற்சியாளர்கள் விபரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன