கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்: ஜோ பைடன் எச்சரிக்கை

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்: ஜோ பைடன் எச்சரிக்கை


     உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தாண்டும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவை அதிகம் பாதித்த நிலையில், அந்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியில் அரசு கவனம் காட்டி வருகிறது.

    குளிர்காலம் தொடங்கவுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அதிபர் ஜோ பைடன் நேற்று பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே உலகம் முழுவதும் பரவி வருகிறது. எனவே, பழைய தடுப்பூசி டோஸ்கள் முழு பலன் அளிக்காது என்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியமாகும்.

     அமெரிக்காவில் மிகக்குறைவான மக்களே பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளனர். விரைவில் குளிர்காலம் வேறு வரவுள்ளதால், மக்கள் வீட்டுக்குள் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் வரும். இது கொரோனா வேகமாக பரவும் வாய்ப்பை அதிகரிக்கும். தற்போதை நாள்தோறும் சராசரியாக 400 பேர் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். எனவே, மக்கள் குளிர்காலத்திற்கு முன்னதாக பூஸ்டர் டோஸ் செலுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என ஜோ பைடன் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
Loading...