First Mid-term Time Table August 2022 | 6,7,8,9,10,11 and 12th First Mid-term Time Table

 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அலகு தேர்வு மற்றும் மாதாந்திர தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



      2022-23ஆம் கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூன் மாதம் 13ஆம் தெறி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது, பிறகு ஜூன் 27ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டது. 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி ஆண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

   அதன்படி, செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு தொடங்கவிருக்கிறது செப்டம்பர் 26ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு தொடங்கவிருக்கிறது எனவே மாணவர்களை தயார் படுத்தும் விதமாக ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அலகு தேர்வு அல்லது மாதாந்திர தேர்வு நடத்தப்படுவது வழக்கமானது. 

     செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்படும், ஆனால் அலகு தேர்வு மற்றும் மாதாந்திர தேர்வு வினாத்தாள்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் குறிப்பிடப்படும் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பிறகு அவன் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் கூறும் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் ஒரு சில தனியார் பள்ளிகள் இந்த கால அட்டவணை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகின்றது பெருமானார் தனியார் பள்ளிகள் தங்களுக்கு என்று ஒரு கால அட்டவணையை தயார் செய்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

    இதுவரை நமக்கு கிடைத்த மாதாந்திர தேர்வு கால அட்டவணை மற்றும் பாடத்திட்டங்களை கீழே பகிர்ந்துள்ளோம் பதிவிறக்கம் செய்து பயன்பெற்று மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவவும்.

1 Comments

Previous Post Next Post
Loading...